Sunday, November 27, 2005

.. நல்ல நேரம்..குழந்தைகளுக்காக..

..நல்ல நேரம், நல்ல நேரம்..

நல்ல நேரம், நல்ல நேரம்
இது தான் நல்ல நேரம்
காலை 8 மணி
பள்ளிக்கூடம் போக வேணும்..

நல்ல நேரம், நல்ல நேரம்
இது தான் நல்ல நேரம்
மாலை 5 மணி
விளையாட போக வேணும்..

நல்ல நேரம், நல்ல நேரம்
இது தான் நல்ல நேரம்
இரவு 10 மணி
நிம்மதியாக தூங்க வேணும்..

நல்ல நேரம், நல்ல நேரம்
இது தான் நல்ல நேரம்
நன்றாக படிக்க
இள வயதே நல்ல நேரம்

நல்ல நேரம், நல்ல நேரம்
இது தான் நல்ல நேரம்
நல்லது செய்ய
எப்போதுமே நல்ல நேரம்..

2 comments:

பரஞ்சோதி said...

அருமையான கவிதை.

அதிலும் கடைசி நாலு வரி நச்சென்று இருக்குது. பாராட்டுகள்.

அப்படியே ஒரு நாலுவரி சேருங்க

நல்லநேரம் நல்லநேரம்
பரஞ்சோதியின் சிறுவர் பூங்கா
பார்க்க, படிக்க, அதன்படி நடக்க
நல்லநேரம் நல்லநேரம்

Holdat9000 said...

நன்றி..பரஞ்சோதி..